மதுரை போஸ்டர்களுக்கு பெயர் போன நகரம் என்பது ஊரறிந்த ஒன்று உலகறிந்த ஒன்று. சினிமா தொடங்கி அரசியல் வரை அத்தனைக்கும் போஸ்டர் தான்.
இதில் மதுரை அடையாளமான சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகள் கழித்து வெகு சிறப்பாக நடைபெற உள்ளது என்றால் சும்மாவா. போஸ்டர்களால் தெறிக்க விட தொடங்கியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள்.
பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது ஷேர் ஆட்டோ பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர்.
'கொரோனா எல்லாம் ஒத்து மதுரை சித்திரை திருவிழா தான் கெத்து' என்று வசனம் பொறித்த அந்த போஸ்டர் நகரை வலம் வருகிறது.
கொஞ்ச காலம் கொரோனா ஆட்டம் போட்ட ஊரில் இனி மீண்டும் நம்ம ஆட்டம்தான் என்று கெத்தாக போஸ்டர் வழியே சொல்கிறார்கள் மதுரை மக்கள்.
2021 ஆண்டோடு கொரோனா ஆட்டம் முடிந்து விட்டது. இனி எங்கள் திருவிழா ஆட்டம்தான் என்று மகிழ்ச்சியோடு உற்சாக துள்ளல் போடுகிறார்கள் மதுரை இளசுகள்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.