மதுரை திருப்பரங்குன்றம் அருகே வடிவேல்கரை காட்டுப்பகுதியில் கண்மாய்க்கரை உள்ளது. கண்மாயில் மீன் பிடிப்பதற்காக அப்பகுதி மக்களும் இளைஞர்களும் வலை அமைத்து இருந்தனர்.
இந்நிலையில் அந்த வலையின் ஒருபகுதி அறுந்து கிடப்பதைக் கண்ட மக்கள் வலையை இழுத்துப் பார்த்த போது வலைக்குள் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வலைக்குள் பாம்பு வசமாக சிக்கிக் கொண்டதால் அதனை மீட்க முடியவில்லை. உடனடியாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் அப்பகுதி இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்தனர்.
தீவிரமாக போராடி வலைக்குள் சிக்கியிருந்த மலைப் பாம்பை மீட்டனர். அந்த பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்று நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் பத்திரமாக வெளியே விட்டனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.