Home /local-news /

குடியரசு தினப் பாதுகாப்பு: பசுமலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கை!

குடியரசு தினப் பாதுகாப்பு: பசுமலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கை!

குடியரசு

குடியரசு தினப் பாதுகாப்பு: பசுமலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கை!

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு முன்னேற்பாடாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு ?

    குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு முன்னேற்பாடாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் சாலையில் பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வாயிலில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வருகிற வாகனங்களை நிறுத்தி, வந்தவர்களை எங்கிருந்து வருகிறார்கள், வண்டி விபரம், பெயர், கைபேசி எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொண்டு அனுப்பி வைத்தனர்.

    சந்தேகப்படும்படியான நபர்களை  லைசென்ஸ், வண்டி உரிமம் உள்ளிட்ட அனைத்தையும் பரிசோதித்த பிறகு அனுப்பி வைத்தனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: India, Madurai, Police, Republic day

    அடுத்த செய்தி