Home /local-news /

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கல்வெட்டுகள் - மதுரை பசுமலை  விசிட்...

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கல்வெட்டுகள் - மதுரை பசுமலை  விசிட்...

காலத்திற்கும்

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கல்வெட்டுகள் - மதுரை பசுமலை  விசிட்...

பெயர் டிசைன் வடிவமைப்பு எல்லாம் சேர்த்து கிரானைட் சதுரடி ரூ.300 முதல் ரூ.450 வரை விற்கிறார்கள். மார்பிளுக்கு பாலிஸ் வேலை இருப்பதால் சதுரடி விலை ரூ.400 இல் இருந்து தொடங்குகிறது. கடப்பாகல் மலிவாக ரூ.150 முதல் ரூ.250 வரை விலை.

    மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள பசுமலையில் ரோட்டோரம் கல்வெட்டுகள் தயாரிப்பகம், விற்பனையகம் வரிசையாக அமைந்துள்ளன. அவற்றை எப்படி தயாரித்து விற்கிறார்கள் என விசாரிக்க ஒரு நிறுவனத்திற்கு சென்று பேசினோம்.

    பார்வதி மார்பிள் உரிமையாளர் ஞான உதயம் என்பவரைச் சந்தித்தோம். அவர் நமக்கு செய்முறைகளை விளக்கினார். கல்வெட்டுகளில் கிரானைட் எனப்படுகிற கருங்கல்லில் கல்வெட்டு செய்தால் எல்லாவித தட்பவெப்பத்திற்கும் தாக்குப் பிடித்து நிற்கும்.வசதி மிக்கவர்கள் சலவைக்கல்லில் அதாவது மார்பிளில் கல்வெட்டு வைக்கிறார்கள். கடப்பாக்கல் எனப்படும் சிலேட்டுக் கல்லிலும் கல்வெட்டு செய்வார்கள். இருப்பினும் அவை சில மாதங்களில் வெளுத்துப் பொலிவிழந்துவிடும் என்கிறார்.

    பெயர் டிசைன் வடிவமைப்பு எல்லாம் சேர்த்து கிரானைட் சதுரடி ரூ.300 முதல் ரூ.450 வரை விற்கிறார்கள். மார்பிளுக்கு பாலிஸ் வேலை இருப்பதால் சதுரடி விலை ரூ.400 இல் இருந்து தொடங்குகிறது. கடப்பாகல் மலிவாக ரூ.150 முதல் ரூ.250 வரை விலை.

    இந்தத் தொழிலில் இருக்கிற நலிந்த தொழிலாளர்களுக்கு அரசு மானியம், தொழில் கடன், வரிச்சலுகை ஆகியவை அளித்து உதவ வேண்டும் என்பது எங்களது கோரிக்கை என்கிறார், ஞான உதயம்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி