மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதி நகரில் வைகையாற்றின் இரு கரையோரங்களிலும் பைபாஸ் சாலை அமைப்பது.
அந்த வகையில் மதுரை ஒபுளா படித்துறையில் பாலம் கட்டுவதற்காக ஷா தியேட்டர் எதிரில் வைகை ஆற்றினுள் மிகப்பெரியளவில் பள்ளம் தோண்டி ஆற்றின் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இது ஆற்றின் மண்வளத்தை நாசப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பாலம் கட்டுவதற்காக வைகையாற்றை சேதப்படுத்தி ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதாக எல்லாத் தரப்பிலிருந்தும் புகார்.
மாவட்ட ஆட்சியாளர் இதில் உடனே தலையிட்டு வைகையாற்றின் மண் வளத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்ட பலரும் குமுறி வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.