மதுரை நேதாஜி ரோடு பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் செல்வராஜ். இவர் அதே பகுதியிலேயே வசித்தும் வருகிறார். இவர் ஜன.,17 அன்று இரவு தனது கடையில் பணி செய்து கொண்டு இருக்கும்போது, திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த சர்வீஸ் சென்டரில் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் சர்வீஸ்க்கு கைபேசி உள்ளிட்டவற்றைக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் எரிந்து பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.