Home /local-news /

சிதைந்த வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் பலி;  அதிகாரிகள் மீது மகன் குற்றச்சாட்டு 

சிதைந்த வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் பலி;  அதிகாரிகள் மீது மகன் குற்றச்சாட்டு 

சிதைந்த வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் பலி;  அதிகாரிகள் மீது மகன் குற்றச்சாட

சிதைந்த வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் பலி;  அதிகாரிகள் மீது மகன் குற்றச்சாட

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94 -வது வார்டு காந்திஜி முதல் குறுக்குதெரு மணி இம்பாலா தியேட்டர் பாதையில் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. 

    துரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94 -வது வார்டு காந்திஜி முதல் குறுக்குதெரு மணி இம்பாலா தியேட்டர் பாதையில் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிதலமடைந்த நிலையில் காணப்படும் இந்த வாய்க்கால் பாலத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில்தான். இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. கடந்த 3 நாட்கள்முன் திருநகரை சேர்ந்த கருப்பையா என்ற முதியவர் சைக்கிளை ஓரத்தில் நிறுத்திவிட்டு பாலத்தை கடக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அவர் தவறிவிழுந்து உயிரிழந்துவிட்டதாக அவர் மகன் தெரிவித்துள்ளார். எனினும் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் இனிமேலும் இதுபோன்ற உயிர்பலிகள் நேரக்கூடாது என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது. கவனிப்பார்களா அதிகாரிகள்?

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி