Home /local-news /

வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பிடிஆர்..

வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பிடிஆர்..

PTR Palanivel Thiyagarajan

PTR Palanivel Thiyagarajan

Madurai Chithirai Thiruvizha | திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை கள்ளழகர் வைகையில் இறங்குதல் ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ளது.

    துரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கான பணிகளை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் இன்று (ஏப்ரல் 9 ) நேரில் பார்வையிட்டனர்.

    மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த வாரம் முழுக்கவே திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளால் மதுரையே விழாக் கோலம் பூண்டிருக்கும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை கள்ளழகர் வைகையில் இறங்குதல் ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ளது.

    இதற்காக மதுரை ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக இன்று அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

    மதுரை எம்.எல்.ஏ.வும் தமிழக நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகர ஆணையர் கார்த்திகேயன், மாநகர மேயர் இந்திராணி ஆகியோர் குழுவாக வந்து பார்வையிட்டனர்.

    லட்சக்கணக்கில் கூடும் மக்களுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் அனைத்தையும் முழுவீச்சில் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரண்டாண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதித்து திருவிழா நடத்துவதால் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வழக்கத்தை விடவும் திரளான பக்தர்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் ஆய்வில் ஆலோசனை செய்யப்பட்டது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி