மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது ம.வெள்ளாளபட்டி. இங்கு கோவில் திருவிழாவை முன்னிட்டு
மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி அங்குள்ள கோவில் தொழுவத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு மார்ச் 18 அன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
வெள்ளாளபட்டி கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களை சுமந்துவந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்தனர். மரியாதை நிகழ்வுகள் முடிந்ததை அடுத்து ஒவ்வொரு காளைகளாக மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்டன.
அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை இளைஞர்கள் பாய்ந்து அடக்க முற்பட்டனர். இளைஞர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காளைகளை அடக்கி உற்சாகம் அடைந்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த வெள்ளாளபட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்று விடாத வகையில் கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.