மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் இரண்டு பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்து. இதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குமுட்ராம்பட்டி நான்கு வழிச்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபத்தில் வீராச்சாமி என்ற 18 வயது இளைஞர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவத்தில் பைக்கில் உடன்வந்த மற்றொரு நபரான மோகன்தாஸ், மகாராஜா மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த சுப்பிரமணி ஆகிய மூவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இவர்கள் உடனடி சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.