மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியில் கம்புளியான் கண்மாய் உள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மீன்பிடித் திருவிழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
சருகுவலையபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனர். இவர்கள் மார்ச் 9 அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டதும் அனைவரும் கண்மாயில் இறங்கி தங்கள் கைகளில் வைத்திருந்த மீன்கூடைகள், வலைகள், கச்சா உள்ளிட்டவை கொண்டு பல்வேறு வகை மீன்களைப் பிடித்து அசத்தினார்.
கெளுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினார். பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பின்பு தாங்கள் சாப்பிடுவோம் தெரிவித்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.