மதுரை மாவட்டம் மேலூர் சருகுவலையபட்டி அரியூர்பட்டியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்கு அமைந்துள்ள மோகினி சாத்தான் கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து கண்மாய்க் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களை பிடிக்க கண்மாயில் இறங்கினர்.
இந்த மீன்பிடி விழாவில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர். இப்படி பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்வதில்லை.
அதற்கு மாறாக, அவற்றை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவர். இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.