Home /local-news /

அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகிய 1000 நெல் மூட்டைகள்.!

அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகிய 1000 நெல் மூட்டைகள்.!

மேலூரில் மழையால் 1000 நெல்மூடைகள் வீண் : அதிகாரிகளின் அலட்சியமே என குற்றச்சாட்டு

மேலூரில் மழையால் 1000 நெல்மூடைகள் வீண் : அதிகாரிகளின் அலட்சியமே என குற்றச்சாட்டு

Madurai| : மேலூர் நாவினிப்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

    மேலூர் நாவினிப்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது என விவசாயிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    மேலூர் நாவினிப்பட்டி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவந்த நெல்மூடைகள் இன்னும் ஏற்றுமதி செய்யாமல் கிடக்கிறது.

    விவசாயிகளின் நெல்மணிகளுக்கு உரிய விலை கொடுக்ககப்பட்ட நிலையில், அவை கிட்டங்கியில் பாதி ஏற்றுமதி செய்யப்பட்டு மீதம் இருந்த 1000க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் திறந்தவெளியில் கிடப்பில் போடப்பட்டன.

    இந்நிலையில் ஏப்ரல் 9 நேற்று மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் ஒருமணிநேரம் கனமழை கொட்டியது.

    இந்தக் கனமழையால் நெல்மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் ஊறி சேதமடைந்தன. அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மூடைகள் நனைந்து வீணாவதாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி