Home /local-news /

கோவில் திருவிழாவில் போலீசாருக்கு மண்டகப்படி மரியாதை அளித்து கவுரவிக்கும் கொட்டாம்பட்டி மக்கள் - காரணம் என்ன?

கோவில் திருவிழாவில் போலீசாருக்கு மண்டகப்படி மரியாதை அளித்து கவுரவிக்கும் கொட்டாம்பட்டி மக்கள் - காரணம் என்ன?

ஆடல்பாடல்

ஆடல்பாடல் நிகழ்ச்சியை மக்களுடன் கண்டுகளித்த போலீசார் - கொட்டாம்பட்டி திருவிழாவில

Madurai District | மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் , தீச்சட்டி, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை  பக்தர்கள் செலுத்தினர்.

    துரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் , தீச்சட்டி, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மன் தரிசனம் கண்டு செல்கின்றனர். திருவிழாவையும் கண்டு களித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு இரவு ஆடல்பாடல் கலைநிகழ்ச்சி கொட்டாம்பட்டி காவல்நிலையம் எதிரே மைதானத்தில் கோலகலமாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    ஆங்கிலேயர் காலத்தில் இந்த ஆலயம் உருவாக அப்போதைய காவலர் உறுதுணையாக இருந்துள்ளார். எனவே திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் போலீசாருக்கும் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    எனவே இன்று வரை காவல்துறைக்கும் கோயில் மற்றும் ஊர்மக்கள் சார்பாக மண்டகப்படி மரியாதை வழங்கப்படுகிறது. காவல் துறையினரும் இணைந்து இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.


    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி