Home /local-news /

Madurai | மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

Madurai | மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

Madurai District | மதுரை மேலூர் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சதுரங்க போட்டிகளில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர்

    துரை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் தங்கமயில் ஜுவல்லரி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டி மார்ச் 27 ஞாயிறன்று வடக்கு மாசிவீதி கோகுல் ஹிட்ஸ் பள்ளியில் நடந்தது.

    போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் 8 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மாணவர்களில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் 6 சுற்றுகளில் விளையாடி 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், அதே பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் 6 சுற்றுகளில் 4.5 புள்ளிகள் பெற்று 6-ம் இடமும் வென்றனர்.

    மாணவர்களில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மேலூர் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி அ. தமிழரசி 6 சுற்றுகளில் 5 புள்ளிகள் பெற்று 4-ம் இடம் வென்றார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, மாணவர்களுக்கு செஸ் பயிற்சியளித்த அ.செட்டியார்பட்டி பள்ளி இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    கல்வி அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் மாணவர்களை மகிழ்வுடன் பாராட்டினர். இப்பள்ளியின் மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட, மாநில, சர்வதேச அளவிலான 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, இதுவரை 400 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Chess, Madurai

    அடுத்த செய்தி