Home /local-news /

திருவாதவூர் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..

திருவாதவூர் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..

திருவாதவூர் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..

திருவாதவூர் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..

Madurai Thiruvadhavur Temple | மதுரை மாவட்டம் மேலூரையொட்டி உள்ளது திருவாதவூர்.

    மேலூர் அருகே திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    மதுரை மாவட்டம் மேலூரையொட்டி உள்ளது திருவாதவூர். இங்கு பிரசித்திபெற்ற திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூக்குழி திருவிழா இந்தாண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர். இந்த திரௌபதியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருக்கத் தொடங்கி உள்ளனர்.

    விரதம் மேற்கொள்ள தொடங்கியுள்ள பக்தர்கள் வருகின்ற 18-ம் தேதி இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி