மதுரையில் குற்றச் சம்பவங்கள் குறித்து கண்டறிந்து குற்றவாளிகளை சுலபமாக கைது செய்ய காவல் துறைக்கு உதவியாக இருந்த சலூன்கடைக்காரர் சிசிடிவி மீது ரவுடிகளுக்கு கடுப்பு. கடையை நொறுக்கி அட்டகாசம்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அவ்வப்போது அந்த பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும்.
இது தொடர்பாக காவல்துறையினர் இவருடைய கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வந்தனர். அந்தப் பகுதியின் எல்லா மூலைகளையும் கவர் செய்வதால் அந்தக் கடை சிசிடிவி போலீஸ் ஃபிரன்ட்லி.
இதனால் 'கடுப்பு' அடைந்த அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கடை ஊழியர் சரவணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சரவணன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த பவித்திரன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.