பூதவாகனத்தில் ஈசனும் அன்ன வாகனத்தில் அன்னையும் அருளும் இரண்டாம்நாள் உற்சவம்.
கடந்த அத்தியாத்தில் சொன்ன விளக்கத்திற்கு ஏற்றபடியே முந்தைய நாளைவிட இரண்டுமே சற்றே பெரிய வாகனங்கள்.
பூதி என்றால் மகிழ்ச்சி எனவும் செல்வம் எனவும் பொருள்படும். பூதம் இசைஞானம் பெற்றது. எனவே, மகிழ்ச்சி, செல்வம், ஞானம் அளவில்லாது வழங்கவே வருகிறார் ஈசன். பூதநாயகன் எனும் பெயர் ஈசனுக்கு உண்டு.
அன்னவாகன ரூபினியாய் அம்பிகை. பிரம்மனின் வாகனம் அன்னம். பிரம்மனுக்கு உரித்தான அறிவும் ஆற்றலும் அருளாய் பெறலாம் இந்த வாகனத்தில் அவளை தரிசித்தால். இது காலகாலமாய் பெரியவர்கள் கூற்று.

இரண்டாம் நாள் உலா எழுந்தருளள்
சித்திரை உற்சவங்களில் தேரோட்டம் வரையிலுமே சொக்கர் பிரியாவிடை தனி வாகனமும், மீனாட்சிக்கு தனி வாகனமும்தான். சொக்கரோடு வரும் பிரியாவிடை சமேத சோமாஸ்கந்த வடிவம் எதற்கு? மீனாட்சி அம்சம் என்பது என்ன?
பிரியாவிடை சொக்கரிடத்து பிரியாது உடன்நிற்கும் வரம்பெற்ற சரிபாதி; அர்த்தநாரி. அம்பாளின் போகசக்தி. மனதால் சிவசிந்தனை தியானிக்கும் மனோன்மணி. ஒவ்வொரு முறை பார்வதி தவறுகள் செய்ய, அவதாரமெடுப்பாள். இது சக்தியை உயர்த்திக் கொள்வதற்கே. அந்த வகையில் மீனாட்சி அன்னை சிரோன்மணி; அவதாரம்.

இரண்டாம் நாள் உலா எழுந்தருளள்
சிவன் பார்வதி கந்தன் இதுவே பஞ்சமூர்த்தங்களின் ஒன்றான சோமாஸ்கந்த வடிவம். தகப்பன், தாய், குழந்தை. இப்படி குடும்பமாகவே உற்சவத்தில் எழுந்தருளுவர். சிரோன்மணி கதை சொன்னேன். 'சிலோன்'காரன் கதை சொல்லட்டுமா?
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.