மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பிரம்மாண்டமான டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு இயங்காத நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். அது தொடர்பாக நியூஸ் 18-ல் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தோம். அதனை அடுத்து தற்போது மீண்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே இயங்கத் தொடங்கியுள்ளது.
தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பயணிகள், சுற்றுலா பயணிகள் பகலும் இரவும் வந்த வண்ணம் பரபரப்பாக இருக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். பயணிகள் வசதிக்காக, நலனுக்காக சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்த பஸ் ஸ்டாண்ட் போதியநவீன வசதிகள் செய்யப்படாமல் அப்படியே கிடப்பது சோகம்.
இது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் டிஸ்ப்ளேயாவது இயக்கலாமே என நியூஸ் 18-ல் செய்தி வெளியிட்டு இருந்தோம். மக்கள், பயணிகள் பலரது குமுறலையும் வெளிப்படுத்துவதாக வந்திருந்த அந்த செய்தி பலரது தரப்பிலும் ஆதரவைப் பெற்றது.
இந்நிலையில் அந்த பிரம்மாண்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே மீண்டும் பஸ் நிலையத்தில் இயங்க தொடங்கியுள்ளது. இது பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் டிஸ்ப்ளேயில் விளம்பரங்கள் மட்டும் வெளியிடாமல் பயணிகளுக்கு தேவையான அறிவுரைகள், பேருந்துகள் குறித்த விவரங்கள், பாதுகாப்பு குறித்த வழிமுறைகள் உள்ளிட்ட ஒலி ஒளி காட்சிகள் இடம் பெற வேண்டும்.
அதுவே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாகவும் உள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.