Home /local-news /

மழைவேண்டி மேலூர் அருகே மஞ்சுவிரட்டு - துள்ளிவந்த காளைகள்

மழைவேண்டி மேலூர் அருகே மஞ்சுவிரட்டு - துள்ளிவந்த காளைகள்

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள். காளைகளை அடக்கி இளைஞர்கள் உற்சாகம். மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம்.

    மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி இளைஞர்கள் உற்சாகம். மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம்.

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளினிபட்டியில் அமைந்துள்ளது, ஆண்டிகருப்புசாமி கோவில். இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அங்குள்ள சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகளை கொண்டுவருவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

    முன்னதாக, கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து காளைக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதனை அடக்க முற்பட்ட காளையர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகம் அடைந்தனர். காளைகளை அடக்க முயன்ற சுமார் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

    இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மஞ்சுவிரட்டு நடைப்பெற்றதால் இந்தாண்டு மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி