Home /local-news /

விஜய் கெட்டப் ஊர்வலம் - மதுரை மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

விஜய் கெட்டப் ஊர்வலம் - மதுரை மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

மதுரை

மதுரை மாநகராட்சி 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இந்த வார்டின் கவுன்சிலர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த திருமதி. நாகேஸ்வரி சுரேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மாநகராட்சி 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இந்த வார்டின் கவுன்சிலர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த திருமதி. நாகேஸ்வரி சுரேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    துரை மாநகராட்சி 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இந்த வார்டின் கவுன்சிலர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த திருமதி. நாகேஸ்வரி சுரேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டார். அந்த ஊர்வலத்தில் விஜய் வேடத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் ஓட்டி வர, மற்றவர்கள் மனுத் தாக்கலுக்காக ஊர்வலமாக வந்தனர்.

    மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் விஜய் கெட்டப்பில் தோன்றிய அந்த நபர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தினார். அந்த சைக்கிள் பயணத்தை நினைவுபடுத்தியதாக ரசிகர்களும் , இயக்கத்தினரும் கூறினர்.

    மதுரை மாநகராட்சியின் ஒரே ஒரு வார்டில் மட்டும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இந்த உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கி உள்ளது. இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி