மதுரை மேலூர் திருச்சுனை கல்குவாரி குளத்தில் குளித்துக்கொண்டிருந்த கல் உடைக்கும் கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனையில் கல்குவாரி உள்ளது. இதில் பாறை குளம் ஒன்றும் இருக்கிறது. குளத்தில் குளிப்பதற்காக வந்துள்ளார் கல் உடைக்கும் கூலி தொழிலாளியான பாண்டி.
குளித்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென எதிர்பாராத விதமாக குளத்து நீரில் மூழ்கிய பாண்டி தத்தளித்தபடி உயிரிழந்து இருக்கிறார். இது தொடர்பாக தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றினா்.
கைப்பற்றப்பட்ட பாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இந்த மரணம் சம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.