மதுரை மாவட்டம் பனையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறை வளைத்துப் பிடித்து கைது செய்தது.
மதுரை பனையூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக குற்றவாளிகளைக் கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.
போலீசாரின் பிடியில் சிக்கிய பாலு (49 வயது), சுரேஷ் (21 வயது) இருவரும் கைது செய்யப்பட்டனர். சிலைமான் காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் இருந்து 25 கிலோ கஞ்சா , ரூ.7,000 ரொக்கம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய டாடா இண்டிகா கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், கஞ்சா பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் ஆகியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.