Home /local-news /

மதுரை வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் தீ விபத்து - பதறியடித்து வெளியேறிய மாணவர்கள்

மதுரை வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் தீ விபத்து - பதறியடித்து வெளியேறிய மாணவர்கள்

மதுரை வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் தீவிபத்து - பதறியடித்து வெளியேறிய மாணவர்கள்

மதுரை வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் தீவிபத்து - பதறியடித்து வெளியேறிய மாணவர்கள்

Madurai | தீ விபத்து ஏற்பட்டதனால் கல்லூரி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மாணவர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.

    தமிழ்நாடு வக்பு வாரிய கலைக்கல்லூரி மதுரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வருகிறது.  ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்ற மிகவும் பிரமலமான கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த வக்புபோர்டு கல்லூரியில் மார்ச் 9 அன்று மதியம் திடீரென வளாக காலியிடத்தின் புதர் பகுதிகளில் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்தனர் .

    தீயை அணைக்க கடுமையாக போராடினர். கல்லூரி நுழைவாயில் பகுதியில் தீயணைப்பு வாகனம் உள்ளே நுழைய முடியாததால் தீயணைக்கும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆனாலும் ஒருவழியாக தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதனால் கல்லூரி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மாணவர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.

    தீ விபத்து குறித்து விசாரித்ததில் கல்லூரி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்தனை பெரிய பரப்பளவைக் கொண்ட வக்புவாரிய கல்லூரி வளாகத்தில் 20 ஏக்கர் பரப்பளவு வெறும் காலியிடமாக இருக்கிறது.

    மேலும், முறையாக பராமரிக்கப்படாத இந்த இடம் முழுக்கவே புற்களும் முள்செடிகளும் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. காலியிடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்காத நிலையில் இளைஞர்கள் முட்புதருக்குள் புகுந்து புகைபிடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் உள்ளது.

    காலி இடத்தை தூய்மையாக பராமரிக்க தீயணைப்புத்துறையினரும் வருவாய்த் துறையினரும் கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை அறிவறுத்தியும் உரிய நடவடிக்கை நிர்வாகம் எடுக்கத் தவறியுள்ளது அம்பலமாகியிருக்கிறது.

    எனவே, தீ விபத்து ஏற்படாத வகையில் கல்லூரி நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: College, Madurai

    அடுத்த செய்தி