மதுரை பைபாஸ் சாலை பகுதியில் போடி ரயில்வே லைன் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மணல் அள்ளுவதாக மதுரை காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வந்துள்ளது.
உடனடியாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகுமுத்து தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதி மணல் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கழிவு மணல் தான் குவிக்கப்பட்டு இருக்கிறது என்பதும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டவில்லை என்பதும் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
மணல் பகுதியில் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் இருந்ததைக் கண்ட யாரோதான், மணல் அள்ளப்படுகிறது என தகவல் கொடுத்துள்ளார். தகவல் தந்தவரின் தொலைபேசி என்னை மீண்டும் அழைத்த போது, தொடர்பு கிடைக்கவில்லை. எனவே தவறான தகவல் என போலீசார் விசாரணையை முடித்துக் கொண்டனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.