Home /local-news /

மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி; மதுரையில் கடுமையாகும் விதிமுறைகள்

மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி; மதுரையில் கடுமையாகும் விதிமுறைகள்

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகக் கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என ம?

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகக் கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என ம?

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகக் கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என ம?

    துரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகக் கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை சார்பில் ஜன.,21 அன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் மேற்சொன்ன பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த மாவட்ட எஸ்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஒவ்வொரு காவல் சரக எல்லைக்குட்பட்ட மேற்கண்ட பகுதிகளில் சிசிடிவி வைக்கக் கோரி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் காவல் அதிகாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார்.

    மக்கள் கூடும் இடங்களில் வணிகம் செய்வோர் தாமாக முன்வந்து தங்கள் கடைக்கு உள்ளே, வெளியே வந்து செல்லும் நபர் பற்றி கண்காணிக்க சிசிடிவி பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தாத கடைக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதோடு, இதை கடைப்பிடிக்காதவர் மீது அரசாணைப்படி உரிய நடவடிக்கை உறுதி எனவும் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், சிசிடிவி வைக்க மறுப்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும். எனவே மாவட்டத்திற்குள் குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்த ஏதுவாக வணிகர்கள் தாமாக முன்வந்து சிசிடிவி கேமரா பொருத்தி மதுரையை ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு நல்குமாறு எஸ்பி வேண்டுகோள். இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துகுமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: CCTV, Madurai

    அடுத்த செய்தி