Home /local-news /

மதுரையில் சூதாட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை - போலீசாருக்கு எஸ்.பி அறிவுறுத்தல்

மதுரையில் சூதாட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை - போலீசாருக்கு எஸ்.பி அறிவுறுத்தல்

சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களில் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு செய்து அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    துரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜன.,21 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பகம் செய்தியறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. தங்கள் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் எவ்வகையிலும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக்கூடாது என்ற எஸ்.பியின் அறிவுரைப்படி சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களில் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு செய்து அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதனடிப்படையில் அலங்காநல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இளங்கோவன் போலீசாருடன், ஆரியூர் கண்மாய் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ. 14,010 பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

    சூதாட்டம் ஒரு கொடிய சமூக பிரச்சனை என்பதை உணர்ந்து சூதாட்டத்தில் பல குடும்பங்கள் தங்கள் ஒளிமயமான வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி