மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே உள்ளது ஜெயகோபால் கரோடியா ஆரம்பப்பள்ளி. இது மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இப்பள்ளியின் சுற்றுச்சுவரில் ஒருபகுதி கடந்த சில நாள்களுக்கு முன் இடிந்து விழுந்துள்ளது.
கொரானா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் வளாகத்தில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், விழுந்த கட்டிடப்பகுதியின் இடிபாடுகளைக்கூட அகற்றாமல் பலகைகள், தகரங்கள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
பிப்ரவரி 1 முதல் பள்ளி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவரின் பிற பகுதிகள் நிலை குறித்து சந்தேகம் எழுப்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
நெல்லையில் நடந்த பள்ளி சுற்றுச் சுவர் விபத்தைப் போலவே இங்கும் நடந்திடுமோ எனும் பயம் தொற்றிக் கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வரவழைக்க வேண்டும். அதுவரை பள்ளி திறக்கக் கூடாது என மாநகராட்சிக்கும் அரசுக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.