Home /local-news /

'மக்கள் வரிப்பணம் வீண்' - காத்தாடுகிறது மதுரை பொதிகை நிலையம்! 

'மக்கள் வரிப்பணம் வீண்' - காத்தாடுகிறது மதுரை பொதிகை நிலையம்! 

மக்கள் வரிப்பணம் வீண்

'மக்கள் வரிப்பணம் வீண்' - காத்தாடுகிறது மதுரை பொதிகை நிலையம்! 

கடந்த சில ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தி வந்த நிலையம் தற்போது முற்றாக செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது.

    மதுரை கேகேநகர் பகுதியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் பொதிகை நிலையம் பழைய களையை இழந்து நிற்கிறது. இதுகுறித்து பலரும் மனக்குமுறலை வெளிப்படுத்தியதால் கள நிலவரத்தை அறிய நேரில் சென்று பார்த்தோம்.

    டெல்லி தூர்தர்ஷன், தமிழகத்தில் பொதிகை நிலையம் அலைவரிசையை நடத்துகிறது. இதன் தென்மாவட்ட கேந்திரம் மதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய எம்.பி மோகன் முயற்சியால் சுதந்திர தினத்தன்று துவங்கப்பட்டது.

    மதுரை மட்டுமன்றி தென்மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் அனைவரையும் ஊக்கம் கொடுத்து உந்தித் தள்ளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்து கேந்திரம் இப்போது கேட்பாரின்றி கிடைக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தி வந்த நிலையம் தற்போது முற்றாக செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது.

    நிரந்திரப் பணிகளுக்கான ஆட் தேர்வுப் பணிகள் நடைபெற்று நீண்ட காலம் ஆகிவிட்டதாக தெரிவித்தார், நிலைய ஊழியர் ஒருவர்.

    இரண்டு மாடிக் கட்டிடம், பிரம்மாண்ட ஸ்டூடியோ அரங்கம், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் என எல்லாமே இருந்தும் அத்தனையும் அப்படியே வீணாக காட்சியளிக்கின்றன. பொதிகை நிலையம் மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என மதுரைவாசிகள், பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி