Home /local-news /

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்  உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்  உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்  உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்  உத்தரவு

நாளை (பிப்ரவரி 17 ) முதல் 19-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களும் பிப்ரவரி 22 நாளன்றும் என மொத்தம் நான்கு நாட்கள் மதுபான கடைகள் அனைத்துமே மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாளை (பிப்ரவரி 17 ) முதல் 19-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களும் பிப்ரவரி 22 நாளன்றும் என மொத்தம் நான்கு நாட்கள் மதுபான கடைகள் அனைத்துமே மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. தேர்தலை முன்னிட்டு, நாளை பிப்ரவரி 17-ம் தேதி முதல் தேர்தல் நாளான பிப்ரவரி 19 வரையிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 தேதி அன்றும் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியரும் இது குறித்த விரிவான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

    பிப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 22ந்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மருடணி சேகர் அவர்களின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai, Tasmac

    அடுத்த செய்தி