Home /local-news /

மீனாட்சி கோயில் கோபுரமும் மழைவானும் நிகழ்த்திய அற்புதம் - 'கைலாய தரிசன உணர்வு' பக்தர்கள் பரவசம்!

மீனாட்சி கோயில் கோபுரமும் மழைவானும் நிகழ்த்திய அற்புதம் - 'கைலாய தரிசன உணர்வு' பக்தர்கள் பரவசம்!

மதுரை

மதுரை கோவில்

மதுரையில் சித்திரை திருவிழா வெகுசிறப்பான கொண்டாட்டத்தோடு நடைபெற்று வருகிறது. இன்று வீதிகளில் திருவிழாவுக்காக ஒலித்துக் கொண்டிருந்த கைலாய வாத்தியம் பக்க நாதமாக ஒலிக்க ஏதோ கைலாய காட்சி காண்பதைப் போன்ற ஒரு உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தியதாக வந்திருந்த மக்கள் பரவசப்பட்டனர்

மேலும் படிக்கவும் ...
    துரையில் சித்திரை திருவிழா வெகுசிறப்பான கொண்டாட்டத்தோடு நடைபெற்று வருகிறது. கொடியேற்ற நாளன்று, நான்காம் நாளன்று, நேற்றைய தினம் என அடுத்தடுத்து கோடை மழை மதுரையில் பொழிந்து வந்தது.

    திருவிழாவின் ஆறாம் நாளான இன்றைக்கும் காலையிலிருந்து மேகமூட்டம் சூழ்ந்து பகல் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் அம்மன், சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூடிநின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலாவின் போது மழைபெய்து கொண்டிருந்தது. மின்னல் வானில் வெட்ட, திருவிழாவுக்காக கோபுரங்களில் அமைக்கப்பட்ட மின்னொளி அலங்காரங்கள் மினுமினுத்தன.



    வீதிகளில் திருவிழாவுக்காக ஒலித்துக் கொண்டிருந்த கைலாய வாத்தியம் பக்க நாதமாக ஒலிக்க ஏதோ கைலாய காட்சி காண்பதைப் போன்ற ஒரு உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தியதாக வந்திருந்த மக்கள் பரவசப்பட்டனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி