Home /local-news /

வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!

வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!

வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி

வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி

Madurai Chithirai Thiruvizha Series | மீனாட்சி கோயிலுக்கு பலரும் பலவித சேவைகளை செய்துவருகின்றனர். அதிலும் மன்னர் காலங்களில் மீனாட்சி கோயிலுக்குத் தொண்டு செய்தலை பிறப்பின் நோக்கமாகவே கருதியவர்கள் ஏராளம். அப்படியான இருவர் அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை. | chithirai festival,

மேலும் படிக்கவும் ...
    மீனாட்சி கோயிலுக்கு பலரும் பலவித சேவைகளை செய்து வருகின்றனர். அதிலும் மன்னர் காலங்களில் மீனாட்சி கோயிலுக்குத் தொண்டு செய்தலை பிறப்பின் நோக்கமாகவே கருதியவர்கள் ஏராளம். அப்படியான இருவர் அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை..

    இவர்கள் மீனாட்சி கோயிலுக்கு செய்த கைங்கர்யங்கள் கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி, அவர்களது வேண்டுகோள் கேட்டார். தங்கள் ஊருக்கு அம்மையும் அப்பனும் ஒருநாள் வந்து தங்கி அருளவேண்டும் என அவர்கள் பதிலுரைத்தனர். அன்றுமுதல் இந்த நான்காம் நாள் மண்டகப்படி.

    சித்திரை திருவிழா


    கைங்கர்யம் செய்து வரம்கேட்ட இருவரின் ஊர், வில்வபுரம். வில்வமரங்கள் நிறைந்த ஊர் என்பதால் வில்வபுரம் எனப் பெயர் என்பர். தற்போது வில்லாபுரம் என வழங்குகின்றனர். மக்கள் பாவங்களை காய்த்து போக்கச் செய்வதால் மண்டபத்துக்குப் பெயர் பாவக்காய் மண்டபம். பாவக்காய்கள் நிவேதனமாக இறைவனுக்கு மக்கள் அளித்து வந்ததால் இந்தப் பெயரானது என்றும் கூறுகின்றனர்.

    சித்திரை திருவிழா


    மதுரை தெற்குவாசலை அடுத்த வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு இறைவனும் இறைவியும் பல்லக்கில் காலையில் வந்து தங்குவர்.

    மீண்டும் மாலை புறப்பட்டு இரவு கோயிலை அடைவர். அன்றைய தினம் மாசிவீதி சுற்றுவதில்லை. சின்னக்கடைத்தெரு வழியாகவே சென்று வருவர். வில்லாபுரம் சுவாமி மண்டகப்படி முழுக்க சுற்றுவட்டார பக்தர்கள் வந்து கூடிநின்று தரிசித்த வண்ணம் இருப்பர்.

    சித்திரை திருவிழா


    வில்லாபுரம் மண்டபம் சரி, விளையாட்டைக் காண வேண்டுமே... அருள்மட்டும் போதுமா? மதுரையே திருவிளையாடல் மண்தானே...

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி