மீன்போலே இமைமூடாது நமைக் காப்பாள் மீனாட்சி. அவளும் அப்பனும் மக்களைக் காத்தல் அனுதினமும் நடக்கும் அருள்பாலிப்பு என்றால், இந்த திருவிழா நாள்கள் இறையின் சிறப்புக் காத்தல் காலம் என்கின்றனர் பெரியவர்கள். அந்த சிறப்பு காத்தல்
மதுரையில் தொடங்குகிறது.
கொடியேற்றத்துக்கு முந்தையநாள் அதாவது இன்று (ஏப்ரல் 4) வாஸ்து சாந்தி நிகழ்வு. திருவிழா நடக்க இருக்கிறது. மதுரை மண்ணின் அதிபெரும் முக்கிய நாள். இதில் பஞ்சபூதங்களால் நன்மையை தவிர வேறேதும் நேர்ந்திடக் கூடாது என வேண்டுகிற நிகழ்வு அது. நிலதேவர் வழிபாடு என்பர். மீனாட்சி கோயில் வளாகத்திற்குள் இரவு ஐம்பூதங்களை வணங்கும் வகையில் வேதமந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் யாகம் வளர்த்து வழிபடுவர்.

மீனாட்சியம்மன்
இந்நாட்களில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை கட்டுப்படும் என்பது நம்பிக்கை. திருவிழா நாள்களில் மீனாட்சிகோயில், மாசிவீதிகள் எனப் பகுதி எங்கும் துக்க நிகழ்வுமே தள்ளிப் போகுமாறு அமைகிறது என்பது ஆன்மிகப் பெரியோரின் மெய்சிலிர்ப்புக் கூற்று.
மனிதப் பிறப்பின் அறுவகை அழுக்கை இறைவன் தன் ஞானக்கண்ணால் சுத்தம் செய்தலே திருவிழாவின் தாத்பரியம் என்பது சைவ சித்தாந்தம். மதுரையை பொறுத்தவரை திருவிழாக்கள் அதிகம். மீனாட்சியம்மன் கோயிலில் மட்டுமே ஆண்டின் முக்கால் பகுதி திருவிழாதான். அதாவது ஆண்டின் 365 நாள்களில் 274 நாள்கள் திருவிழா நடக்கிறது.
சரி, மனித உடலோடும், மனிதப் பிறப்போடும் தொடர்புடையது சித்திரை திருவிழாவில் தயாராய்... திருவிழாவைத் தொடங்குவோம்...!
செய்தியாளர் : மு.முததுக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.