Home /local-news /

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - நிகழ்ச்சி நிரல் விவரங்கள்

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - நிகழ்ச்சி நிரல் விவரங்கள்

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

Madurai Chithirai Festival : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 2022-ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

  துரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 2022-ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

  மதுரை மீனாட்சி கோயில் மற்றும் அழகர் கோயில் திருவிழா விபரங்கள் இதோ...

  மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா 2022:

  ஏப்ரல் 5 முதலாம் நாள் காலை கொடியேற்றம் மாலை மாசி வீதிகளில் கற்பகவிருட்சம், சிம்மவாகனம் பவனி. வேண்டியது எல்லாமே கிடைக்கும். ஆணவத்தை அழிக்கும்.

  ஏப்ரல் 6 இரண்டாம் நாள் மாலை மாசி வீதிகளில் பூத வாகன, அன்ன வாகன பவனி. அறிவு, ஞானம், தெளிவு கிடைக்கும்.

  ஏப்ரல் 7 மூன்றாம் நாள் மாலை மாசிவீதிகளில் கைலாச பர்வதம், காமதேனு வாகன பவனி. இறைவனின் கருணைப் பார்வையும், கேட்டதை வாரி வழங்கும் அருளும் கிடைக்கும்.

  ஏப்ரல் 8 நான்காம் நாள் காலை சித்திரைவீதி, தெற்குமாசிவீதி, சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் செல்லுதல். மாலை புறப்பட்டு பல்லக்கில் இரவு கோயிலை அடைதல். பாவங்களை அழிக்க வல்ல தரிசனம்.

  ஏப்ரல் 9 ஐந்தாம் நாள் காலை வடக்குமாசிவீதி ராமாயண சாவடி அடைதல். மாலை குதிரை வாகனங்களில் புறப்பட்டு கோயிலை அடைதல். இறைவனே நமக்கு வேண்டியதை தர வல்லவன் என்பதை உணர்த்தும் தத்துவம்.

  ஏப்ரல் 10 ஆறாம் நாள் ரிஷப வாகனம். இறைவனுக்கு உகந்த வாகனம். விரும்பும் வாகனம் வாங்குவதற்கு இந்த வாகன தரிசனம் செய்தல் நன்று.

  ஏப்ரல் 11 ஏழாம்நாள் நந்தீஸ்வரர் யாளி வாகனம்.

  ஏப்ரல் 12 எட்டாம் நாள் பட்டாபிஷேகம். எட்டு மாதங்கள் ஈசன் ஆட்சி முடிந்து, நான்கு மாத அம்பிகை ஆட்சி தொடங்கும் நிகழ்வு. பரிவாரங்களுடன் தக்கார் கையில் அம்பிகை செங்கோல் பெற்று இரண்டாம் பிரகார வலம் வருவது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சி.

  ஏப்ரல் 13 ஒன்பதாம்நாள் திக்குவிஜயம். இந்திரா விமானங்களில் வலம். எட்டுத் திசை பாலகர்களையும் வாதில் வென்று, தனது மணாளனை எதிர்நின்று கண்டு நாணி தலைகுனிந்து தனம் மறைந்து மணமாக தயாராகிறார். அப்போது நடைபெறும் பெண்வீட்டு சீர்வரிசை நிகழ்வு ஊர்கண்படும்!

  ஏப்ரல் 14 திருக்கல்யாணம். மணமாகாதவர்கள், மண ஆசை இல்லாதவர்கள் இந்த நிகழ்வைக் கண்டால் விரைவில் மணம் செய்வர் என்பது ஐதிகம். இரவில் யானை, பூப்பல்லக்கு வாகனம்.

  ஏப்ரல் 15 தேரோட்டம். நகரும் கோயில் எனப்படும் தேரில் பவனி. மாசுவீதி முழுக்க வடம் பிடித்து இழுத்து வந்தால் ஆண்டு 365 நாள்களும் மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்றிரவு சொக்கர், பிரியாவிடை, மீனாட்சி மூவரும் ஒரே வாகனத்தில் சப்தாவர்ணக் கோலம்.

  மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


  கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022

  ஏப்ரல் 12 கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம். மாலையில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் உலா வருவார்.
  ஏப்ரல் 13 காலையும் மாலையும் கோயிலில் சுந்தரராஜபெருமாள் உலா.

  ஏப்ரல் 14 காலையில் கோயிலில் சுந்தரராஜபெருமாள் உலா. மாலையில் குத்தீட்டி, கொண்டை, வளரி, கைத்தடி, கண்டாங்கி அணிந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு மதுரைக்கு புறப்படுவார்.

  ஏப்ரல் 15 அதிகாலை வைகையின் தெற்கே தேரோட்டம் நடந்து கொண்டிருக்க, வடக்கே நகருக்குள் வரும் கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை. பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்வு. மாலை அவுட்போஸ்ட் அம்பலக்காரர் மண்டகப்படி முதல் தல்லாகுளம் வரை திரியாட்டம் வியக்க வைக்கும். அன்று நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கி தங்கக் குதிரை வாகனத்திற்கு மாறுகிறார்.

  ஏப்ரல் 16 அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் மாலையை அணிந்து ஆயிரம்பொன் சப்பரம் ஏறி வைகையில் இறங்குகிறார். ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி. அண்ணாநகர் வழியாக சென்று வண்டியூரில் இரவு தங்குகிறார்.

  மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


  ஏப்ரல் 17 காலை சேஷவாகனத்தில் வண்டியூர் முழுக்க அருள்பாலிக்கிறார். கருடவாகனம் மாறி வண்டியூர் அருகே தேனூர் மண்டபம் சென்று நாரைக்கும் மண்டூகருக்கும் சாபவிமோசனம் தருகிறார். மாலை ராஜாங்க கோலத்தில் ராமராயர் மண்டகப்படி. அங்கு விடிய விடிய தசாவதாரம்.

  ஏப்ரல் 18 விடிந்ததும் மோகனாவதாரம். பின்னர் கனக தண்டியலில் தல்லாகுளம் திரும்புதல். இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபம்.

  ஏப்ரல் 19 அதிகாலை மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு. காலை தங்கப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு மதுரைக்கு புறப்படுதல். அன்று இரவு அப்பன் திருப்பதியில் சேவல் சண்டை களைகட்டும்.

  ஏப்ரல் 20 காலை கள்ளழகர் அழகர்மலையை அடைகிறார்.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Suresh V
  First published:

  Tags: Madurai, Madurai Chithirai Festival

  அடுத்த செய்தி