Home /local-news /

கயிலாய பர்வத வாகனம்.. நசுக்கிய ஈசனை மயக்கிய ராவணன்... 3ம் நாள் தரிசித்தால் இந்திரலோக வாழ்வு!

கயிலாய பர்வத வாகனம்.. நசுக்கிய ஈசனை மயக்கிய ராவணன்... 3ம் நாள் தரிசித்தால் இந்திரலோக வாழ்வு!

Madurai Chithirai Thiruvizha

Madurai Chithirai Thiruvizha

Madurai Chithirai Thiruvizha Series | இசைவாணனான ராவணன் தன் கை எலும்புகளை இசை நரம்பாக்கி இறைவனுக்குப் பிரியமான சாமகானம் வாசித்தான். உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்தான். இது புராணம். அந்தப் புராண காட்சியாக கயிலாய மலையோடு ராவணன் சாமகானம் இசைத்த நிலையில் அமைந்ததே கயிலாய பர்வத வாகனம்.

மேலும் படிக்கவும் ...
    லங்கை அரசன் ராவணன் சிவபக்தன். மூன்று வேளையும் கயிலாய மலையில் சிவனை தரிசிக்கும் பேறு பெற்றவன். தினமும் தரிசனம் செய்து வந்த ராவணனுக்கு திடீரென ஒரு பாதக எண்ணம்.

    ஒவ்வொரு வேளையும் கயிலாயம் சென்று வரவேண்டி உள்ளது. தரிசனத்துக்கு வசதியாக லங்கைக்கு மலையை பெயர்த்து கொண்டுவருவோம் என முற்பட்டான். கைலாயமலை ராவணனால் அசைகிறது.

    ராவண ஆணவம் ஒடுக்க தனது கால் கட்டைவிரலால் மலையை அழுத்துகிறார். கயிலாயம் பெயர்க்க நீண்ட ராவணன் கை சிக்கிக் கொண்டது. இசைவாணனான ராவணன் தன் கை எலும்புகளை இசை நரம்பாக்கி இறைவனுக்குப் பிரியமான சாமகானம் வாசித்தான்.

    Madurai Chithirai Thiruvizha


    உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்தான். இது புராணம். அந்தப் புராண காட்சியாக கயிலாய மலையோடு ராவணன் சாமகானம் இசைத்த நிலையில் அமைந்ததே கயிலாய பர்வத வாகனம்.

    இதையும் படிங்க:  பிரியாவிடை, மீனாட்சி, சோமாஸ்கந்தர்... யார் இவர்கள்? இரண்டாம் நாள் உலாவோடு இவையும் அறிவோம்! 

    பஞ்சமாபாதங்களையும் மனம் திருந்த ஈசன் கருணையோடு மன்னிக்கத் திருவுளம் கொள்வான் என்பதை எடுத்துக் காட்டும் வாகனம் கயிலாய பர்வதம். ஈசனுக்கு கயிலாய பர்வதமென்றால், மீனாட்சிக்கு காமதேனு வாகனம்.

    Madurai Chithirai Thiruvizha


    கற்பக விருட்சம் போல காமதேனுவும் பாற்கடல் கடையக் கிடைக்கப் பெற்றது. பெண் தலையும் மார்பும் பசுவின் உடலும் மயில் தோகையும் கொண்டது காமதேனு. கற்பக விருட்ச வாகன பலனே காமதேனுவுக்கும். அந்த வாகனம் காணாதோர் இந்த தரிசனத்தால் பலன் பெறலாம்.

    இதையும் படிங்க:  விசிறி சேவகம்... நந்தியாட்டம்... கயிலாய வாத்தியம்... அடியார் கூட்டத்தால் அமர்க்களப்படும் ஆலவாய் நகரம்! 

    செல்வம் உள்ளிட்ட அத்தனையும், கேட்டதையெல்லாம் கொடுக்க வல்ல வாகன தரிசனம். இந்த வாகனத்தில் அம்பிகையைக் காண்போர்க்கு இந்திர உலகத்திலே வசிக்கும் பாக்கியம் உண்டு என்பது புராணக் கோட்பாடு.

    இப்போது தேர்முட்டி தேர்களின் கூட்டுப்பகுதி பணிகள் நிறைவடையும் தருவாயில். சரிசரி... வழவழவென்றால் எப்படி, காலையிலேயே புறப்பட்டால்தானே அம்மையும் அப்பனும் கோயில்விட்டு போய் தங்கி இரவு திரும்ப முடியும்...

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி