Home /local-news /

சொக்கருக்கு பெயர் 'ரா தங்கார்'... ஆலய நடைசாத்தும் அதிகார நந்தி..

சொக்கருக்கு பெயர் 'ரா தங்கார்'... ஆலய நடைசாத்தும் அதிகார நந்தி..

மதுரை சித்திரை திருவிழாவில், சொக்கருக்கு பெயர் 'ரா தங்கார்'... தகவல்

மதுரை சித்திரை திருவிழாவில், சொக்கருக்கு பெயர் 'ரா தங்கார்'... தகவல்

Madurai Chithirai Festival | மீனாட்சி கோயிலில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள். உற்சவ மண்டகப்படிகள் கோயிலுக்குள்ளும், கோயிலைச் சுற்றிய வீதிகளிலும் அமைந்திருக்கும். அங்கு தரிசனம் அளித்து திரும்புவர் அம்பாளும் ஈசனும். |madurai, chithirai festival,

மேலும் படிக்கவும் ...
    மீனாட்சி கோயிலில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள். உற்சவ மண்டகப்படிகள் கோயிலுக்குள்ளும், கோயிலைச் சுற்றிய வீதிகளிலும் அமைந்திருக்கும். அங்கு தரிசனம் அளித்து திரும்புவர் அம்பாளும் ஈசனும்.

    சில மண்டகப்படிகள் கோயில் வீதி எல்லைகளைக் கடந்திருக்கும். உச்சிகாலபூஜை வரை தங்கி புறப்பாடாவதும், சாயரட்சை வரை தங்கி புறப்பாடாவதும் உண்டு. முழுநாள் தங்கி திரும்புவது எட்டு மண்டகப்படிகள்.

    திருப்பரங்குன்றம், தெப்பக்குளம், சிந்தாமணி, புட்டுத்தோப்பு, திருவாப்புடையார், வில்லாபுரம், ராமாயணச்சாவடி, வலைவீசி தெப்பக்குளம் ஆகியவையே அந்த எட்டும். அதிகாரநந்தி எல்லா சிவாலயங்களிலும் உள்ளது.

    இதையும் படிங்க:    வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!

    கோயிலில் இருந்து சுவாமி புறப்பாட்டின்போது அதிகார நந்தி புறப்பாடு என்றால் கோயில் நடை சாத்தப்படும் எனப் பொருள். அதாவது, நடைசாத்திவிட்டு புறப்பாடாகும் போது அதிகார நந்தியும் எழுந்தருளுவார்.

    உற்சவர் நாள் தங்குவதற்கு புறப்பாடாகும் இந்த எட்டிலும் மூன்று புறப்பாட்டில் மட்டுமே அதிகார நந்தி எழுந்தருளுகிறார். திருப்பரங்குன்றம், தெப்பக்குளம், புட்டுத்தோப்பு ஆகியவை. மேலும் அஷ்டமி சப்பரம், சித்திரைத் தேரோட்டம் ஆகியவற்றிற்கும் அதிகார நந்தியுடன் புறப்பாடு உண்டு. இவற்றில் உச்சிகால பூஜைக்கு கோயில் திரும்பிடுவார்.

    இதையும் படிங்க:   கயிலாய பர்வத வாகனம்.. நசுக்கிய ஈசனை மயக்கிய ராவணன்... 3ம் நாள் தரிசித்தால் இந்திரலோக வாழ்வு!

    ஆண்டின் எந்த உற்சவத்தின் மண்டகப்படிகளிலும் இரவு தங்கல் சொக்கருக்கு கிடையாது. இதனாலேயே 'சொக்கர் ரா தங்கார்' - அதாவது, இரவு தங்கமாட்டார் எனும் பெயர் பெற்றார் சோமசுந்தரர்.

    ஒருகாலத்தில் ரசவாதம் செய்த லீலைக்காக திருப்புவனம் தலத்துக்கு புறப்பாடெல்லாம் நடந்திருக்கிறது. அதுவும்கூட ஏறத்தாழ 18 கி.மீ., தூரம் உற்சவம் முடிந்து ஒரே நாளில் தம்பதிக்குத் திரும்பியிருக்கிறார், பெருமான்.

    இதையும் படிங்க:  'தனியாக தவிக்கிறேன்...' மனம் திறக்கும் மீனாட்சி கோயில் பார்வதி யானை - ஓர் கற்பனை! 

    கோயில் உற்சவங்கள் என்றாலே யானை இல்லாமலா... இத்தனை பெரிய கோயில், இவ்வளவு உற்சவங்கள்... மீனாட்சிக் கோயிலின் யானைகள் வரலாறு சோடை போகுமா என்ன? 1, 2, 3... 12. அட, எண்ணுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்?

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி