Home /local-news /

ஞானமும், வாகனமும் வேண்டிப் பெறலாம்... ஆறாம்நாள் அம்மையப்பர் ரிஷபக் காட்சி!

ஞானமும், வாகனமும் வேண்டிப் பெறலாம்... ஆறாம்நாள் அம்மையப்பர் ரிஷபக் காட்சி!

வாகனமும் ஞானமும் வேண்டிப் பெறலாம்... ஆறாம்நாள் அம்மையப்பர் ரிஷபக் காட்சி!

வாகனமும் ஞானமும் வேண்டிப் பெறலாம்... ஆறாம்நாள் அம்மையப்பர் ரிஷபக் காட்சி!

Madurai Chithirai Thiruvizha Series : மதுரை சித்திரை திருவிழாவின் ஆறாம்நாளன்றும் பன்னிரண்டாம் நாளன்றும் இருமுறை சொக்கநாதர் மீனாட்சி ரிஷப வாகனக் காட்சியளிக்கின்றனர்.

    சீர்காழி தலத்தில் தந்தை சிவபாதர் கோயில் குளத்தில் நீராட, பையன் சம்பந்தர் கரையில் நிற்கிறான். குளத்துக்குள் தந்தை வெகுநேரம் காணாததால் பிள்ளை அழத் தொடங்கினான். வானில் இருந்து ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் வந்து அம்மை கையில் பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டி மறைந்தார். அழுகையும் நின்றது.

    குளத்திலிருந்து வந்த தந்தை, சம்பந்தர் வாயில் பால் ஒழுகுவதை கண்டு 'எச்சில் பால் யாரிடம் பெற்றாய்' என கோபித்ததும், இறைவனைக் கைகாட்டி 'தோடுடைய செவியன்' பதிகம் பாடினார். மழலைச் சொல் சிறுவன் மொழியெடுத்து பதிகம் பாடியது கேட்டு தந்தையும் ஊராரும் ஆனந்தம் கொண்டனர்.

    திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டவந்த ரிஷபவாகன அம்மையப்பர் தரிசனம். இதனைக் கண்டிட, குழந்தைகளுக்கு ஞானம் பிறக்கும், மணமானோர்க்கு ஞானக்குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும், ஈசனுக்குரிய வாகனமான இதை தரிசிப்போர் அடுத்தாண்டிற்குள் நினைத்த வாகனம் வாங்குவர். இது நடக்கிற அதிசயம் என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர்கள்.

    அருள்பெற்ற ஆன்மாவின் மாசற்ற அனுக்கிரகக் கோலம் இந்த ரிஷப வாகன கோலம் என்கிறது சாஸ்திரம். ஆண்டிற்கு பன்னிரண்டு முறை சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் அருள்கிறார். குறிப்பாக சித்திரைத் திருவிழாவில் மட்டும் இரண்டுமுறை. அதாவது திருவிழாவின் ஆறாம்நாளன்றும் பன்னிரண்டாம் நாளன்றும் சொக்கநாதர் மீனாட்சி ரிஷப வாகனக் காட்சி!

    ஆறாம் நாளாகிவிட்டதா, பத்தாம் நாள் திருமண நாள் நெருங்குகிறதே... இறைவனுக்கு மட்டுமா?

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி