மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவின் ஈர்ப்புகளில் ஒன்று, அங்கு இசைக்கப்படும் கயிலாய வாத்தியம். சிவபெருமான் குடிகொண்ட கயிலாய மலையில் இந்த வாத்தியங்கள் இசைக்கப் படுவதாக ஐதிகம்.
உடல், தாளம், எக்காளம், திருச்சின்னம், கொக்கரை, கொம்பு என மொத்தம் 74 வாத்தியங்கள். ஆனாலும் அவை அனைத்தும் புழக்கத்தில் இல்லாததால் இந்த சிவவாத்தியங்களில் சில வாத்தியங்களை மட்டும் இசைக்கின்றனர்.
தமிழக பெரிய சிவாலயங்கள் ஒவ்வொன்றிலும் தனிபெயர்களில் இந்த வாத்திய அடியார்க்கூட்டம் இருக்கிறது. மதுரை கோயிலுக்கு 'திருஆலவாய் அப்பர் திருக்கூட்டம்'. உற்சவங்களில் சொக்கரின் குமிழ்சிரிப்புக்கு ஏற்றபடி நளின நடைகள் மதுரையை அள்ளும்.
இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் நாயகன், ஆணவம் கெடுக்கும் நாயகி... முதல்நாள் திருஉலா!
வாத்தியம் இசைக்கும் அடியார்களின் லேசான புன்சிரிப்பும், சிவதாண்டவமும் நந்தியாட்டமும் ஆடுகிற சிவனடியார்களின் மகிழ்ச்சிக் கூத்தும் சித்திரைத் திருவிழா வீதியுலாவை மென்மேலும் உற்சாகமாக்கும்.

சித்திரை திருவிழா
இவர்களோடு நந்தியாட்டம் ஆடும் அடியார் சரவணகுமார். தன்னை இறைவனுக்கு ஒப்புவித்து எட்டாண்டுகளாக சேவை செய்து வருகிறார். தனது 97 வயதிலும் கெட்டியாகப் பிடித்து மயில்தோகை விசிறி வீசுகிறார் விசிறித் தாத்தா நடராஜன். இது அவரது அறுபத்திரண்டு ஆண்டுகால அடியார் சேவை.

சித்திரை திருவிழா
இவர்களோடு, விலைவாசி குறித்த தடுமாற்றம் ஏதுமின்றி இறைவன் மீது பாரம் போட்டு பரமனுக்கும் பக்தர்களுக்கும் குங்கிலிய தூப சேவையாற்றும் சிவனடியார் உள்ளிட்டோர் மதுரைத் திருவிழாவை பழமை மாறாது காக்கின்றனர்.

சித்திரை திருவிழா
அவர்கள் மட்டுமா, கலைநிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டே மாசிவீதி சுற்றும் சிறுவர் சிறுமிகள், மாணவர்கள், கலைஞர்கள், மெய்யன்பர்கள் யாவருமே இறைவனை வாகன உயரத்தைவிட இன்னும் மனதளவில் உயர்த்தி கண்ணாரக் காட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: ஆடிமாதம் அம்மனுக்கு, ஐந்து மாதம் ஈசனுக்கு... கொடியேற்றமும் மீனாட்சி கோயில் கொடிமரங்களும்!
அதெல்லாம் சரி, அறிவும் மகிழ்ச்சியும் செல்வமும் அடைய முடியுமே இந்தத் திருவிழாவில். ஆச்சர்யம்தான், அடுத்து வரும்...
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.