Home /local-news /

உங்க வீட்ல எந்த ஆட்சி... மதுரையா? சிதம்பரமா?

உங்க வீட்ல எந்த ஆட்சி... மதுரையா? சிதம்பரமா?

உங்க வீட்ல எந்த ஆட்சி... மதுரையா? சிதம்பரமா?

உங்க வீட்ல எந்த ஆட்சி... மதுரையா? சிதம்பரமா?

விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகரன் ஆயகலைகள் அனைத்தும் கற்றான் பரதம் தவிர. கூத்தப் பெருமானின் ஆடலைக் கற்றல் சிவநிந்தனை என்றான் அவன். 

    விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகரன் ஆயகலைகள் அனைத்தும் கற்றான் பரதம் தவிர. கூத்தப் பெருமானின் ஆடலைக் கற்றல் சிவநிந்தனை என்றான் அவன்.

    ஆனால், இது சம்பந்தமாக பாண்டிய தேசத்தின் கலையுணர்வுக்கு இழுக்கு நேரும் சூழல் உருவானதால் பரதம் கற்க முற்பட்டான். தினமும் பயிற்சி எடுத்தான்.

    சில மணிநேரப் பயிற்சிகளிலேயே கால்கள் அவனுக்கு வலிக்கத் தொடங்கின. அந்த வலியால் அவன் கூத்தபிரானை எண்ணினான். நமக்கே கால் வலிக்கிறதே யுகங்களாக காலுயர்த்தி கூத்தாடும் சிவனுக்கு கால் வலிக்குமே என எண்ணினான்.

    உடனே வெள்ளியம்பல நடராஜ சன்னதி அடைந்தான். ஒரே காலில் நிற்கும் உனக்கு கால் வலிக்கும். உடனே கால் மாற்றி நிற்கச் சொன்னான் ராஜசேகரன். மறுத்தால் சிவபதவி அடைவதாக கூறினான்.

    ராஜசேகரனின் சிவபக்திக்கும், தன்மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் இறங்கிய வெள்ளியம்பல நடராஜபெருமான் தனது இடக் காலை மாற்றி வலக் கால் ஊன்றி ஆடினார்.

    தில்லையம்பல நடராஜன் இடக்காலையே ஊன்றியிருப்பார். இதற்கும் மதுரை, சிதம்பர ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேள்வி வரும். அது தான் தத்துவம்.

    சக்திக்கு இடபாகம் அளித்தவன் ஈசன். சிதம்பர தில்லையம்பலத்தில் இடக்காலைத் தூக்கி, வலக் காலை ஊன்றி ஆடியதால் அவன் காலே மண்ணில் ஆட்சி புரிகிறது.

    மதுரை வெள்ளியம்பலத்தில் ராஜசேகரனால் வலக்காலைத் தூக்கினார் ஈசன். சக்தியின் இடக்காலே மதுரை மண்ணில் ஆட்சி புரிகிறது. இப்போதும் வெள்ளியம்பல சன்னதியில் கால் மாறி ஆடிய நடராஜர் தரிசனம் கிடைக்கும்.

    இதுவே வழக்கு மொழியில் பேசிக் கொள்ளும் சிதம்பர ஆட்சி, மதுரை ஆட்சி விபரம். சரி, ஆட்சி பொறுப்பேற்றால் போதுமா, ஆயத்தமாக வேண்டாமா?

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி