Home /local-news /

மதுரை சித்திரை திருவிழா 2022 - இன்று சப்பர முகூர்த்த விழா

மதுரை சித்திரை திருவிழா 2022 - இன்று சப்பர முகூர்த்த விழா

மதுரை

மதுரை சித்திரை திருவிழா 2022 - சப்பர முகூர்த்த விழா இன்று (பிப்.,7) நடைபெற்றது

Madurai chithirai festival ஒவ்வொராண்டும் அழகர்மலை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முதல் நிகழ்ச்சி, சப்பர முகூர்த்த விழா.

  • Last Updated :
    துரை சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா பிப்.,7 அன்று தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடைபெற்றது. அழகர் கோயில், கூடலழகர் கோயில், மீனாட்சி கோயில் பரிவாரங்களுடன் விழா நடந்தது.

    ஒவ்வொராண்டும் அழகர்மலை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முதல் நிகழ்ச்சி, சப்பர முகூர்த்த விழா. இந்த விழா, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும்.

    அதன்படி , இந்தாண்டு சித்திரைத் திருவிழாவிற்கான சப்பர முகூர்த்த விழா ரதசப்தமியான (பிப்.,7)இன்று நடந்தது. காலை 9:30 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்தலாங்கம் நிகழ்ச்சியும், மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் சப்பர முகூர்த்த விழாவும் நடைபெற்றது.

    நிகழ்வில் அழகர்கோயில், மீனாட்சியம்மன் கோயில், கூடலழகர் கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் தங்கள் கோயில்களின் பரிவாரங்களோடு கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி