Home /local-news /

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி என பரவும் தகவல் உண்மையா?

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி என பரவும் தகவல் உண்மையா?

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி என பரவும் தகவல் உண்மையா?

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதி என பரவும் தகவல் உண்மையா?

Madurai Chithirai Thiruvizha | கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

    துரை சித்திரை திருவிழா இந்தாண்டு வழக்கம்போல் மக்கள் அனுமதியுடன் நடைபெறும் என்றும், நிகழ்ச்சி நிரல்கள் இவை தான் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவை எதுவும் கோயில் நிர்வாகிகளால் முறையாக அறிவிப்பாக வெளியிடப்படவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    மதுரையில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் என இரண்டு கோயில்களிலும் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழா குறித்த அறிவிப்பு அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பாக முறையாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியிடப்படும்.

    ஆண்டின் தொடக்கத்தில் காலண்டர்களிலேயே இந்த நாட்கள் சரியாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் கோயில் நிர்வாகத் தரப்பில் நேரம் காலம் சரியாக குறிக்கப்பட்டு முறையாக வெளியிடப்படுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

    இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து விட்டது. ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக சமூக, அரசியல், கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

    எனவே இந்தாண்டு சித்திரை திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு வழக்கம்போல வெகு சிறப்பாக திருவிழா நடைபெறும் என பக்தர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் சித்திரை திருவிழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோயில் நிர்வாகிகளால் இன்னும் வழங்கப்படாத நிலையில், சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சமூக ஊடங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    அதில் திருவிழா தொடக்கம், அழகர் ஆற்றில் இறங்கும் தேதி, மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளன.

    ஆனால் 'இந்த தகவல்களை இன்னும் நாங்கள் முறையாக வெளியிடவில்லை' என கோயில் நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    திருவிழா குறித்த முறையான அறிவிப்பை கோயில் நிர்வாக அதிகாரிகளான நாங்கள் விரைவில் அறிவிப்போம். அதுவரை அவசரப்பட வேண்டாம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    செய்தியாளர்: மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி