மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏழாம் நாள் விழா இன்று இரவு நடைபெற இருந்தது ரத்தானது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் காலையில் பல்லக்கிலும் இரவு பல்வேறு வாகனங்களில் மாசிவீதி உலா வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பகல் முழுவதும் மதுரையில் அடைமழை விடாது கொட்டி தீர்த்தது. மேலும் மாலையிலும் மழை பொழிந்து கொண்டிருந்தது.
சுவாமி அம்பாள் வீதி உலாவிற்கு புறப்பட்டு கோயிலின் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வழக்கம்போல் வந்தனர். ஆனாலும் மழை விட்டபாடில்லை. தொடர்ந்து மழைத்தூறல் நீடித்ததால் மாசி வீதி உலா இன்று ரத்து செய்யப்பட்டது.
சுவாமி அம்பாள் யாழி நந்தீஸ்வர வாகனங்களுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு பக்தர்கள் வணங்க அனுமதித்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாசிவீதி உலாவில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் கோயில் வாசலில் இருந்து அம்மனும் சுவாமியும் தரிசித்து திரும்பினர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.