Home /local-news /

இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடக்கும்... சித்திரை பொருட்காட்சி நடக்குமா? - குழம்பும் மதுரைவாசிகள்

இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடக்கும்... சித்திரை பொருட்காட்சி நடக்குமா? - குழம்பும் மதுரைவாசிகள்

இந்தாண்டு

இந்தாண்டு சித்திரை திருவிழா நடக்கும்... சித்திரை பொருட்காட்சி நடக்குமா?

Madurai Chithirai Thiruvizha 2022 | ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானம் சித்திரை பொருட்காட்சியால் களைகட்டும். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு சித்திரை திருவிழாவின்போது நடந்த பொருட்காட்சியோடு தமுக்கம் கலையரங்கம் களையிழந்தது.

    துரையில் சித்திரை திருவிழா தொடங்கும் சமயம் சித்திரை பொருட்காட்சியும் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானம் சித்திரை பொருட்காட்சியால் களைகட்டும். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு சித்திரை திருவிழாவின்போது நடந்த பொருட்காட்சியோடு தமுக்கம் கலையரங்கம் களையிழந்தது.

    தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலையரங்கம் கட்டும் பணிகள் மூன்றாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. 2020-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான திட்டமிடலின் போதும் பொருட்காட்சி குறித்த குழப்பம் தொடங்கியது.

    ஆனால், கொரோனா இடர்பாட்டால் திருவிழாவும் கோயிலுக்கு உள்ளேயே முடிந்தது. பொருட்காட்சியும் ரத்தானது. இப்படியே மூன்றாண்டுகள் கழிந்து விட்டன. ஊரடங்கு, பேரிடர் கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டு விட்டன.

    கலை, பண்பாடு, ஆன்மிக, சமுதாய, அரசியல் நிகழ்ச்சிகள் மதுரையில் அதிகம். கொரோனாவுக்குப் பின் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சிகள் பெருக தொடங்கிவிட்டன.

    ஆனாலும் மதுரையின் பழம்பெருமையான தமுக்கம் இன்னும் அடைந்தே கிடக்கிறது. கட்டுமானப் பணிகள் இன்னமும் முடியாததால் சித்திரை பொருட்காட்சியை இங்கு நடத்துவது இயலாத ஒன்று.

    மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு, மாநகராட்சி மைதானம் என புதிதாக போர்டு வைக்கப்பட்டு தயாராக உள்ளது.
    எனவே இங்குதான் சித்திரைப் பொருட்காட்சி நடைபெற உள்ளதா? ஊருக்குள் நடக்கும் திருவிழாவிற்கு, ஊர் கோடியில் பொருட்காட்சி நடத்துவது சாத்தியப்படுமா? என கேள்விகள் எழுகின்றன.

    மாநகராட்சி மௌனம் சாதிப்பது குறித்து மக்களிடையே குழப்பம் தான் நிலவுகிறது.  மாநகராட்சி பணிகளில் மட்டுமல்ல, ஆலோசனைகள், முடிவுகள் என எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனக் கருதுகின்றனர் பொதுமக்களும் பக்தர்களும்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி