ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, நாளை ஒருநாள் மட்டும் பல்லவன் மற்றும் வைகை விரைவு வண்டிகள்
சென்னை -
செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை ரயில்வே கோட்டத்தில் நாளை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, நாளை பிப்ரவரி 16 அன்று சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லவேண்டிய பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து புறப்படும்.
காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் பல்லவன் விரைவு ரயில் (12606) செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு சந்திப்போடு நின்றுவிடும்.
அதேபோல, நாளை பிப்ரவரி 16 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை விரைவு ரயில் (12635) சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலைய சந்திப்பிலிருந்து மதியம் 2.40 மணிக்கு மதுரைக்குப் புறப்படும்.
மேலும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வைகை விரைவு ரயில் (12636) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு நிலைய சந்திப்போடு நின்றுவிடும்.
இவ்வாறு, ரயில்நேரம் மற்றும் மார்க்கம் பகுதியாக ரத்து தொடர்பான அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன்- மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.