Home /local-news /

மதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்: மது போதையில் ஓட்டியதால் விபரீதம்

மதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்: மது போதையில் ஓட்டியதால் விபரீதம்

சேதுபதி

சேதுபதி சிக்னல் : மதுபோதையில் ஓட்டியதால் விபத்து - தீப்பிடித்து கருகிய கார்... ம

காரில் வந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தீயணைப்புத் துறை வீரர்கள் காரில்பற்றிய தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    ள்ளிரவில் சிம்மக்கல்லில் இருந்து சேதுபதி நோக்கி வந்த கார் ஒன்று சேதுபதி சிக்னல் அருகே விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து கருகியது.

    பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த சுகன் என்பவர் ஓட்டிவந்த காரில் மொத்தம் நான்கு பேர் பயணித்துள்ளனர். அனைவரும் மது அருந்தியிருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிம்மக்கல் கடந்து கார் சேதுபதி சிக்னலை அடையும் போது, மது மயக்கத்தால் சுகன் கட்டுப்பாடு இழந்துள்ளார்.

    இதனால் வந்த வேகத்தில் சிக்னல் கடந்து எச்டிஎப்சி வங்கி எதிரில் கார் மோதியது. இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காரில் வந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் கார் தீப்பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவில் தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இந்த கார் விபத்து தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி பாக்கியம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நள்ளிரவில் நான்கு பேர் மது போதையில் ஓட்டி வந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நகரின் முக்கிய பகுதியான சேதுபதி மற்றும் சுற்றுவட்டாரங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Car, Fire, Madurai

    அடுத்த செய்தி