Home /local-news /

மதுரை : டூவீலர்கள் மோதி விபத்து - பெண்ணின் கை எலும்பு முறிந்த சோகம்! 

மதுரை : டூவீலர்கள் மோதி விபத்து - பெண்ணின் கை எலும்பு முறிந்த சோகம்! 

மதுரை

மதுரை : டூவீலர்கள் மோதி விபத்து - பெண்ணின் கை எலும்பு முறிந்த சோகம்! 

சம்பவம் குறித்து தகவலறிந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனங்களைக் கைப்பற்றி விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஹெச்எம்எஸ் காலனியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது சகோதரி சித்ரா. இருவரும் பழங்காநத்தம் பகுதியில் மருத்துவமனை சென்றுவிட்டு பைபாஸ் ரோட்டில் வந்துகொண்டு இருந்தனர்.

    நேருநகர் நோக்கி இருசக்கர வாகனம் வலதுபுறமாக திடீரென திரும்பியதில் சங்கர் நிலைதடுமாறவே, இரண்டு டூவீலர்களும் கீழே விழுந்தன. இந்த விபத்தில் சகோதரி சித்ராவின் இடது கையில் எலும்பு முறிந்தது.

    அருகில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக சித்ராவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனங்களைக் கைப்பற்றி விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மருத்துவமனை பரிசோதனைக்கு வந்த பெண் டூவீலரில் அடிபட்டு, எலும்பு முறிவால் மருத்துவமனை சிகிச்சைக்குச் சென்றது இப்பகுதி மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி