Home /local-news /

மதுரை: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டி... சாலையில் குறுக்கிட்டவரால் விபரீதம்! 

சாலையில் ஒருவர் குறுக்கிட்டதால் எதிரில் வந்த பைக் தடுமாறி விழுந்ததில் பைக்கில் வந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    சாலையில் ஒருவர் குறுக்கிட்டதால் எதிரில் வந்த பைக் தடுமாறி விழுந்ததில் பைக்கில் வந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மதுரை கே.கே. நகர் வக்புவாரிய கல்லூரி அருகே நேற்று பிப்.23 இரவு 9 மணியளவில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் ஒருவர் குறுக்கே வந்துள்ளார்.

    இதை சற்றும் எதிர்பாராத பைக் ஓட்டி, சட்டென பிரேக் அடித்ததில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவருக்கு தலை மற்றும் நெற்றிப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆபத்தான நிலையில் இருந்த நபரைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். எனினும் ஆம்புலன்ஸ் வர தாமதமாகி உள்ளது.

    எனவே, உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

    சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி