Home /local-news /

அழகர்கோயில்: ஜன.,31 பெருமாளுக்கு தைலக்காப்பு - ஜூலை வரை உற்சவர் தரிசனம் மட்டுமே!

பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தைலக்காப்பு சாத்துவது வழக்கம். வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை அழகர்மலை கள்ளழகர் திருக்கோயிலில் சுந்தரராஜ பெருமாளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று தைலக் காப்பு சாத்துவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு தைலக்காப்பு வருகிற ஜன.31 அமாவாசையன்று நடைபெறும். ஜூலை மாதம் 28-ம் தேதி ஆடி அமாவாசை வரை ஆறுமாத காலத்திற்கு இந்த தைலக் காப்பு சாத்தப்படும். இதனால் உற்சவமூர்த்திக்கு மட்டுமே நித்திய பூமாலை, பரிவட்டம், அபிஷேகம், ஆராதனை நடக்கும்.

    மூலவருக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருக்கும் என்பதால் கோயிலுக்கு வருகிற பக்தர்கள் உற்சவரை மட்டும் தரிசித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி