மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் எதிர்சேவை மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி, குழுக்கள் அமைத்து துவங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் அழகர்மலையை விட்டு புறப்பட்டு, மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்கு பயணிப்பார். பின்னர் வண்டியூர் வரை செல்வார்.
இந்தப் பயண பாதைகள் முழுவதும் மன்னர் காலம் தொடங்கி மண்டகப்படிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக மண்டகப்படிகள் அழகருக்காக அமைக்கப்பட்டு வருகின்றன.
கல் மண்டபங்கள், கோயில்கள் என ஆண்டாண்டு காலமாக இருக்கின்ற பழைய மண்டகப்படிகள் காம்ப்ளக்ஸ், கடைகள் புதிய கோயில்கள் என தற்போது சமீபத்தில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகள் என்று அழகர் வந்து தங்கி செல்வதற்காக அமைக்கப்படுகிறது.
இந்த மண்டகப்படிகளின் நிலை குறித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படும். மண்டபங்கள் அமைந்துள்ள பகுதி, அதன் உரிமையாளர், நிர்வகிப்பவர் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்து கொள்ளப்படும். அந்த வகையில் மூன்றாண்டுகள் கழித்து இந்த மண்டகப்படிகள் குறித்த ஆய்வு தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் அழகர்கோவில் சாலையில் நடுவில் சென்டர் மீடியன் அமைப்பு மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது சாலையும் உயரமாக போடப்பட்டுள்ளது.
எனவே சென்டர் மீடியனில் அழகரை கொண்டு செல்வது எப்படி? தார் சாலையில் இருந்து மண்டகப்படி சற்று உயரம் குறைவாய் இருந்தது. அதனை எப்படி சீர் செய்வது? உள்ளிட்ட பல சவால்கள் இந்த முறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றன.
கடந்த முறை நடத்திய ஆய்வில் சித்திரை திருவிழாவில் அழகருக்கு 450 மண்டகப்படிகள் அமைக்கப்பட்டதாக பதிவு உள்ளது. எனவே இந்தாண்டு இன்னும் எத்தனை மண்டாகப்படிகள் கூடுதலாக அமையப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.