Home /local-news /

'ஜொலி ஜொலிக்கும் ஏவி பாலம்' - பாலம் முழுக்க ஜொலிக்கச் செய்ய மக்கள் விருப்பம்

'ஜொலி ஜொலிக்கும் ஏவி பாலம்' - பாலம் முழுக்க ஜொலிக்கச் செய்ய மக்கள் விருப்பம்

ஆங்கிலேயரால்

ஆங்கிலேயரால் கட்டப்பட்டு வரலாற்று பெருமை வாய்ந்ததாக கம்பீரத்துடன் நிற்கிற மதுரை வைகை ஏவி மேம்பாலம் தற்போது அதிகாரிகளின் முயற்சியால் ஜொலிக்கிறது.

ஆங்கிலேயரால் கட்டப்பட்டு வரலாற்று பெருமை வாய்ந்ததாக கம்பீரத்துடன் நிற்கிற மதுரை வைகை ஏவி மேம்பாலம் தற்போது அதிகாரிகளின் முயற்சியால் ஜொலிக்கிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ங்கிலேயரால் கட்டப்பட்டு வரலாற்று பெருமை வாய்ந்ததாக கம்பீரத்துடன் நிற்கிற மதுரை வைகை ஏவி மேம்பாலம் தற்போது அதிகாரிகளின் முயற்சியால் ஜொலிக்கிறது.

    பாலத்தின் ஆழ்வார்புரம் ஓரப்பகுதியின் ஒரேயொரு ஆர்ச் மட்டும் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆர்ச்சில் ஒளிரும் வண்ண விளக்குப் பட்டைகள் பிரமாண்டமாக பொருத்தப்பட்டன.

    சில நாட்களாக நடந்து வந்த இந்தப் பணிகள் தற்போது முடிந்து அசத்தலாக அந்த ஆர்ச் பகுதி காட்சியளிக்கிறது. பல வண்ணங்கள் ஒளிர்ந்து வர்ண ஜாலம் காட்டுகிறது.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் நின்று ரசித்து செல்பி, போட்டோ எடுத்துச் செல்கின்றனர். மேலும், மக்கள் விரும்புவதால் பாலம் முழுக்க இந்தப் பணியைச் செய்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    வைகையாற்றில் அழகர் வந்திறங்கும் சித்திரைப் பௌர்ணமி இரவில் இந்தப் பாலம் அழகாக வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும். ஆனால் நிரந்திரமாக பாலத்தை ஜொலிக்கச் செய்யும் இந்த ஐடியாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி